என் மலர்
நீங்கள் தேடியது "இன்று முதல் சிகிச்சை தொடங்கியது"
+2
- புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
- இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
ஆய்வு
இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது புறநோநாளிகள் வரும் வாகனங்களை மருத்துவமனை மேற்பகுதிக்கு கொண்டு சென்று விடவும், புறநோயாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நுழைவுச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நோயாளிகள் வசதிற்கு ஏற்றவாறு இருக்கை வசதிகள், குடிநீர் வசதி மேற்கொள்ள உத்தரவிட்டார். மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து செயல்படவும் அறிவுறுத்தினார்.
ஷேர் ஆட்டோ வசதி
நாமக்கல் மாவட்ட புதிய தலைமை அரசு மருத்துவமனை திறந்ததை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனை முழுவதுமாக அங்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் இங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் புதிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் ஆட்டோவில் புறநோயாளிகள் செல்ல பயண கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமின்றி செல்ல நாமக்கல் தாசில்தார் சக்திவேல் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற சிலுவம்பட்டியில் உள்ள புதிய மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.






