என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்விஸ் பிரெஸ்லி"

    • நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது நெக்லசை அணிந்திருந்தார்.

    பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி 'ராக் அண்ட் ரோலின் மன்னன்' என போற்றப்பட்டவர். 1954-ம் ஆண்டு இசை துறைக்குள் நுழைந்த இவர் ராக் அண்ட் ரோல் இசையின் தொடக்க வடிவமான 'ராக்கபிலிட்டி' இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் ஒருவராக இருந்தார்.

    1970-ம் ஆண்டு மறைந்த இவர் அணிந்திருந்த சிங்க நக நெக்லஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மேடை நிகழ்ச்சிகள் மற்றும் எல்விஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது அவர் அந்த நெக்லசை அணிந்து செல்வது வழக்கம். 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது இந்த நெக்லசை அணிந்திருந்தார்.

    அவரது இந்த நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நெக்லஸ் ஏலத்திற்கு செல்கிறது. இந்த நெக்லஸ் ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 கோடி) வரை ஏலம் போகும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • 1950-களில் அவர் மேடை ஏறி பாடியபோது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம்.
    • பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் ஏலத்துக்கு விடப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமானவர் எல்விஸ் பிரெஸ்லி. தன்னுடைய இன்னிசையால் 19-ம் நூற்றாண்டு ரசிகர்களை தன்னுடைய காலடியில் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

    1950-களில் அவர் மேடை ஏறி பாடியபோது ஊதா நிறத்திலான காலணிகளை அணிவது வழக்கம். இந்தநிலையில் எல்விஸ் பிரெஸ்லி பயன்படுத்திய அந்த காலணிகள் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரினால் சமீபத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது.

    ஏலம் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அந்த ஒரு ஜோடி காலணியை அவரின் அதிதீவிர ரசிகர் ஒருவர் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலம் எடுத்தார். ஏலம்போன காலணியின் இந்திய மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும்.

    ×