என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் சேவை"

    • நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை
    • எனவே திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் செய்தி வெளியானது.

    இதனிடையே அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக்கல்லில் இருந்து வக்கம்பட்டி, செம்பட்டி, மைக்கேல்பாளையம் வழியாக நிலக்கோட்டைக்கு காலநேர நிர்ணயம் செய்து 56 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து சின்னாபட்டி, கொடைரோடு வழியாக நிலக்கோட்டைக்கு 32 தனி நடைகளும் என மொத்தம் 88 நடைகள் தடை இல்லாமல் நிலக்கோட்டை பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரவு 7, 7.45, 8.20, 8.45, 9.15, 9.25, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் பணி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெ ற்றதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் இயக்கம் கடந்த மாதம் 30ந் தேதி முதல் திண்டுக்கல்லில் இருந்து இரவு. 7.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9.25 மணிக்கு சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் இதேபோல திண்டுக்கல்லில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு நிலக்கோட்டை சென்று திண்டுக்கல்லுக்கு திரும்பும் வகையிலும் கூடுதலாக 4 தனி நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்ல போக்குவரத்து சதவீதத்திற்கு ஏற்ப பஸ் வசதி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

    ×