என் மலர்
நீங்கள் தேடியது "புற காவல் நிலையம்"
- குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
- பஸ் நிலையம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பஸ் நிலையம் நகரின் நடுவில் அமைந்துள்ளது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் குடிமகன்கள் மற்றும் மர்மநபர்கள் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. மேலும் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டமும் இருந்து வருகிறது.
எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பஸ் நிலையம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு கருதி விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க கட்டிடப்பணி தொடங்கும் எனவும், மேலும் பஸ் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்து கம்ப்யூட்டர் மூலம் புறக்காவல் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி தொடங்கும் என இன்ஸ்பெக்டர் இந்திராணி தெரிவித்தார்.






