என் மலர்
நீங்கள் தேடியது "கொசு மருந்து அடிக்கும் பணி"
- கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள்ளது.
- பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்கும் வகையில் பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியை பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
பரமத்தியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் கட்டமாக நேற்று கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்துகள் தெளித்தும், கொசு ஒழிப்பு மருந்து அடித்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வீட்டை சுற்றியுள்ள உடைந்த தேங்காய் சிரட்டைகள், ஆட்டுக்கல் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதை அகற்றினர். பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் இருந்த செடி, புற்களை அகற்றி வருகின்றனர்.






