என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை காளான்கள்"

    • கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும்.
    • இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும். பல்வேறு வகை காளான்கள் முளைத்திருக்கும் என்பதால் காளான் வகை, தன்மைகளை அறிந்த விவசாயிகள், உண்பதற்கு உகந்த காளான்களை கண்டறிந்து பறித்து, உப்பு, காரம் சேர்த்து சமைத்து உண்பார்கள். இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.

    அண்மைக்காலமாக விளை நிலங்களில் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் தெளிப்பது அதிகரித்து வருவதால் விளைநிலங்களின் தன்மை மாறுபட்டு மழைக்காலங்களில் கூட இயற்கையாக காளான்கள் விளைவது அரிதாகிவிட்டது.

    மழைக்காலங்களில்

    வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்று மலை, ஜம்பூத்து மலை, சந்து மலை கிராமங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு குறைவாக காணப்படுவதால் இன்றளவிலும் மழைக்கா லங்களில் இயற்கையாக காளான்கள் விளைந்து வருகிறது.

    வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. காளான் விளைவதற்கு ஏற்ற ஈரப்பதமான, குளுமையான சூழ்நிலை நிலவுவதால் வாழப்பாடி அடுத்த கல்யா ணகிரி, இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் ஆங்காங்கே உண்பதற்கு உகந்த காளான்கள் விளைந்துள்ளன. இந்த காளான்களை இனங்கண்ட றிந்து அவற்றைப் பறித்து சமைத்து உண்பதில் கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இயற்கை முறையில்...

    இயற்கை காளான்கள் அரி தாகி வருவதால் கிராமப்புற மக்களும் செயற்கையாக விளை விக்கப்படும் காளான்களை விலை கொடுத்து வாங்கி சமைத்து உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையாக காளான்கள் விளைவதற்கு விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அங்கக இயற்கை முறை சாகுபடியில் ஈடுபட வேண்டும்.

    விளைநிலத்தில் தானாக விளையும் கிடக்கும் அனைத்து காளான்களும் உண்பதற்கு உகந்ததாக இருக்காது. எனவே காளான்களின் தன்மை அறிந்து உண்பதற்கு ஏற்ற காளான்களை மட்டுமே பறித்து உண்ண வேண்டும். விஷத்தன்மையுடைய காளான்களை பறித்து உண்டால் உடலுக்கு தீமை ஏற்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×