என் மலர்
நீங்கள் தேடியது "பிறகு திறப்பு"
- நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது.
- பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சியில் 3 சமூகத்தினருக்கு பாத்தி யப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன், விநாயகர், நல்லாயி, காமாட்சி அம்மன், நல்லேந்தி ரன், வீரமாத்தியம்மன், கம்பராயன், பட்டதளச்சி அம்மன், கனாமரத்தான் கோவில்கள் உள்ளன.
நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது. இக்கோவில்களில் பூஜை செய்வது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக 10 கோவில்களிலும் எவ்வித பூஜைகளும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வருவாய் துறையினர் கோவில்களுக்கு பாத்தி யப்பட்ட சமூகத்தினரி டையே சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து 7 ஆண்டுகளாக பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த 10 கோவில்களும் நாமக்கல் தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் சீல் அகற்றி திறக்கப்பட்டது.
தொடர்ந்து, ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிகளை வழிபட்டனர். அசம்பாவிதம் தவிர்க்க நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
7 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்ட தையடுத்த, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பட்டாசுகளை வெடித்தனர். அப்போது அப்பகுதியில் பரம சிவம் (42) என்பவரது குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.






