என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர் ஆறுதல்"
- மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
- மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அ.கொந்தளம் கிராமம், கருக்கம்பாளையம் வழியாக வேலூர் சென்ற மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை கலெக்டர் டாக்டர். உமா வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கிடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று விபத்து ஏற்படாத வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம்) (பொ) வாசுதேவன், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) குணா, வட்டார போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் தெற்கு) முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பரமத்தி) ராஜ முரளி மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.






