என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்களில்"

    • சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.
    • போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    புகார்

    இந்த நிலையில் தனியார் பஸ்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹா ரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், ராமரத்தினம், மாலதி ஆகியோர் இன்று காலை சேலம் புதிய பஸ் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

    ரூ.10 ஆயிரம் அபராதம்

    இதில் 50 -க்கும் மேற்பட்ட பஸ்களின் ஏர்ஹாரன் சோதனை செய்யப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் கூறியதாவது:-

    சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை தனியார் பஸ்கள் மட்டுமின்றி, பிற வாகனங்களில் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்ப டையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி பயன்படுத்துவது தெரிய வந்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×