என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக களஞ்சிம்"

    • சிவபெருமானை வழிபட்டால் மங்களங்கள் அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கும்.
    • உலக இயக்கங்களின் நாடியே பஞ்சாட்சரம் தான்.

    சிவம் என்னும் ெசால் மங்களத்தை குறிப்பதாகும். சர்வ மங்களங்களையும் சகல சவுபாக்கியங்களையும் அளிக்க வல்லது சிவம். சிவம் என்றால் மங்களம், சைவம் என்றால் மங்களங்களை அளிக்க வல்ல ஒரு நெறி.

    சிவபெருமானை வழிபட்டால் மங்களங்கள் அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கும். சிவம் தான் சிவபெருமான். அதாவது நற்பலன்களை அளிக்க வல்ல திருவுருவமே சிவபெருமான்.

    சிவ வழிபாடு என்பது வேத காலத்திற்கு முற்பட்டதாகும். வேதங்களிலே சிவபெருமானை பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது. சிவ வழிபாடு நம் இடர்கள் அனைத்தையும் களையவல்லது. இப்படிப்பட்ட சிவ வழிபாட்டின் ஜீவ நாடி நமசிவாய என்னும் ஐந்தெழுத்து பஞ்சாட்சரமாகும். ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாய என்பதை யாரொருவர் சித்த சுத்தியோடு ஜபிக்கிறார்களோ, அவர்களுக்கு சகலமும் கிடைக்கும். என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயரை சொல்லுகிறோம் அல்லவா, அந்த மார்க்கண்டேயர் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து தான் எமனையே வென்றாராம்.

    ராவணன் சிவபெருமானிடம் பெற்ற அருளுக்கெல்லாம் இந்த ஐந்தெழுத்து ஓதியதே காரணம். தீராத வயிற்று வலியால் திருநாவுக்கரசர் துடித்தாரே, அப்போது அவரது வலியை போக்கியது ஐந்தெழுத்து தான். திருநீற்றிலே ஐந்தெழுத்தை ஓதி திலகவதியார் திருநாவுக்கரசரிடம் கொடுத்ததும், கோரமான வயிற்று வலி சாரம் இழந்து நீங்கியது. இதேபோல சம்பந்தர் ஐந்தெழுத்தை ஓதிக்கொடுத்த திருநீற்றினால் தான் மதுரை பாண்டிய மன்னன் நோயும் அகன்றது.

    காரைக்கால் அம்மையார் கையாலயம் சென்றதும், நாயன்மார் பல பேர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதும் இந்த ஐந்தெழுத்தின் விந்தை தான். இப்படிப்பட்ட இந்த பஞ்சாட்சர மந்திரம் வேதத்தின் நடுநாயகமாக திகழ்கின்றது.

    இந்த பஞ்சாட்சரம் தான் பஞ்ச பூதங்களாக திகழ்கின்றது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாகும். இவற்றில் ஏதேனும் ஒன்றில்லா விடில் கூட இந்த உலகமே இயங்காது. உலக இயக்கங்களின் நாடியே பஞ்சாட்சரம் தான். நாம் பஞ்சாட்சரத்தை ஜபிக்கும்போது பஞ்ச பூதங்களையும் துதிக்கின்ற பலனை அடைகிறோம்.

    • சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.
    • அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.

    மகாமகம் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான சிவ ஸ்தலம் இது.

    மகா பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் சிதைத்தார்.

    அப்போது அமுத கலசத்தை தாங்கிக் கொண்டு வந்த "உறி", இந்த இடத்தில் விழுந்து பின்னர் லிங்கமாக மாறிற்று.

    உறிக்கு மறு பெயர் சிக்கம். எனவே இந்த சிவலிங்கத்திற்கு முதலில் சிக்கேசர் என்று பெயர் வந்தது.

    நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தான் செய்த தவறுக்காக குருவான பிரகஸ்பதியின் சாபத்திற்கு உள்ளானான்.

    தனது சாபத்தைப் போக்க சிவபெருமான் தான் கருணை காட்ட வேண்டுமென்று எண்ணி இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானான சிக்கேசரை வழிபட்டு வந்தான்.

    தினமும் தான் நீராடுவதற்காக இங்குள்ள இறைவன் சன்னதிக்கு வலப்புறத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான் சந்திரன்.

    இறைவனும் சந்திரனுடைய வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவனுக்குத் தரிசனம் தந்தார்.

    எனவே இறைவனுக்கு சிக்கேசர் என்ற பெயர் மாறி சோமேஸ்வரர் என்று புதுப் பெயர் வந்தது.

    அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.

    வியாழ பகவான் இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.

    மகப்பேறு வேண்டும் என்பதற்காக பராந்தக சோழன் இந்த லிங்கத்தை வழிபட்டதால்,

    லிங்கம் சோழீசர் என்று பெயர்க்காரணம் ஏற்பட்டது.

    இத்தலத்திலிருக்கும் தேனார் மொழியம்மை இறைவனது திருமேனியை ஆரோகணித்ததால் காரோணம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.

    சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.

    சந்திரதோஷம், குருதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும்.

    மாதவரை விட தூமகேது இங்குள்ள வருண தீர்த்தத்தால் இறைவனுக்கு சதா சர்வ காலமும்

    பூஜை செய்து வணங்கி வர இறைவனும் தூமகேதுவுக்கு காட்சியளித்தார்.

    தூமகேதுவின் வேண்டுகோள்படியே இறைவன் இங்கு நிரந்தரமாக தங்கி தூமகேதுவுக்கு அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள தீர்த்தம் தூமகேது தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

    ×