என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைபணி"

    • ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
    • மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை அம்பத்தூர் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில்களில் உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருக்கோவில்களின் தூய்மை, கோவில்களின் வளர்ச்சி, கோவில் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு கோவிலிலும் உட்பிரகாரங்கள், வெளிபிரகாரங்கள், கோசாலை, திருக்குளம் நந்தவனம், பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது.

    பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடப்பட்டன. மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அருணாச்சலம் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற நிறுவனர் ச.கணேசன் செய்திருந்தார்.

    ×