என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சில் பயணம் செய்த"

    • பாக்கியலட்சுமி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை என கூச்சலிட்டார்.
    • பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் மோ லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாக்கியல ட்சுமி (60). இவர் தனது உறவினர்களுடன் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் வந்துள்ளார்.

    அங்கு கோபிசெட்டி பாளையம் செல்வதற்காக தயாராக இருந்த டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். பஸ் புறப்ப ட்ட நிலையில் மூதாட்டி பாக்கியலட்சுமி தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை என கூச்சலிட்டார்.

    இதனையடுத்து பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சில் இருந்த பயணிகளு டன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    பின்னர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் போலீசார் பஸ் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். எனினும் நகையை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×