என் மலர்
நீங்கள் தேடியது "பெருந்துறை புறவழிச் சாலையில்"
- மேம்பாலங்கள் அமைக்க ஆன்லைன்னில் ஒப்பந்தப் புள்ளி கோரி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இதை பொதுமக்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை:
பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் அமைக்க ஆன் லைன்னில் ஒப்பந்தப் புள்ளி கோரி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை பகுதியில் உள்ள காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, வாய்ப்பாடி சாலை சந்திப்புகளில் ஏதா வது ஒரு இடத்தில் சாலையை கடக்கும் நபர்கள் மற்றும் வாகனங்கள் விபத்து களை சந்தித்து வருகின்றன.
இதில் சிலர் உயிரிழந்துள்ளர். பலர் காயமடைந்துள்ளனர். ஆகவே அப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
இந்த நிலை யில் தேசிய நெடுஞ்சா லை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சா லையில் சுமார் ரூ.92.60 கோடி மதிப்பீட்டில் சித்தோடு மற்றும் பெருந்துறை புறவழிச்சாலையில் காஞ்சிக்கோயில் மற்றும் துடுப்பதி சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் மற்றும் பெத்தாம்பாளையம், விஜயமங்கலம் –வாய்பாடி சந்திப்பு சாலைகளில் சர்வீஸ் ரோடுகள் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரி ஆன்லைன்னில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள் வரவேற்று திருப்பூர் சுப்பரா யன் எம்.பி. மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.






