என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வீட்டுமனைபட்டா கேட்டு"

    • சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பா.ஜ.க. மற்றும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் சரவண குமார் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல், வர்த்தக அணி பிரிவு மாவட்ட துணை தலைவர் சண்முகம், சத்தியமங்கலம் நகரத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஜெய் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பவானிசாகர் கோடே பாளையம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பவானிசாகர் கோடே பாளையம், அண்ணாநகர், பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவானிசாகர் கோடேபாளை யம் பகுதியில் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வீட்டு மனை கேட்டு வழங்க ப்பட்ட மனுவை பரிசீலனை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    ஆனால் மக்கள் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மேலும் சில மாதங்களாகவே வீட்டு மனை பட்டா வழங்க காலதாமதமாகி வருவதால் 2 நாட்களுக்கு முன்பு கோபி கோட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தோம்.

    இதை தொடர்ந்து தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனார்.

    இந்த பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ஆண்கள், பெண் கள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்ட பத்தில் தங்கவைத்தனர் பின்பு இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ×