என் மலர்
நீங்கள் தேடியது "நாற்றங்கால்"
- காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.
- நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, திருவையாத்துக்குடி பகுதியில் தற்போது சம்பா நடவுக்காக நாற்றாங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன இப்பகுதி விவசாயி அரவிந்த் மற்றும் சில விவசாயிகள் பல ஏக்கர் நெல் நடவுக்காக பாய் நாற்றங்கால் அமைத்து நெல் விதைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்து நெல் விதைத்த நாற்றங்காலை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளன காலையில் விவசாயிகள் வயலுக்கு சென்று நாற்றங்காலை பார்த்த போது காட்டு பன்றிகளால் நாற்றாங்கால் சேதம் படுத்தப்பட்டுள்ளது.
கண்டு அதிர்ச்சி அடைந்தனர் விளைநிலங்களை சேதப்படுததும் காட்டு பன்றிகளை உடனடியாக பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






