என் மலர்
நீங்கள் தேடியது "கொடுப்பதால்"
- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
- இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அலங்கம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார். அப்போது குழந்தைகளுக்கு தாயின் கருவில் இருந்து 2 வயது வரை உள்ள சுமார் 1000 நாட்கள் தான் மூளை வளர்ச்சி பெறும் நாள். குழந்தைக்கு தாய்ப்பால் மிக மிக முக்கியமானது. குழந்தைக்கு மூளை வளர்ச்சி சீராக இருக்க தாய்ப்பால் அவசியமானதாக உள்ளது. குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பாலில் கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின், சரியான முறையில் இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாயிற்கு மார்பக புற்றுநோய் வராது. எனவே தாய்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை என்றார். இந்நிகழ்ச்சியில் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மாணவிகளால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.






