என் மலர்
நீங்கள் தேடியது "‘பிரம்ம கமலம்’ செடி"
- கள்ளி மலர் வகையை சேர்ந்த ‘பிரம்ம கமலம்’ செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.
- கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
சேலம்:
வறண்ட நிலங்களில் வளரும் கள்ளி மலர் வகையை சேர்ந்த 'பிரம்ம கமலம்' செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.
இந்த பிரம்ம கமலம் மலர்களைப் போலவே, வாழப்பாடி பகுதி கிராமங்களில் தரிசு நிலங்களில் காணப்படும் கள்ளிச் செடிகளிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெண்ணிறத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும் கள்ளி மலர்கள் பூத்து வருகின்றன. கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
வாழப்பாடி பகுதியில், கல்யாணகிரி, சிங்கிபுரம், தமையனுார், மன்னாயக்கன்பட்டி கிராமங்களில், மானாவரி விளைநிலங்களின் வேலியோரங்களிலும், கல்லாங்குத்து தரிசு நிலங்களிலும் காணப்படும் கள்ளிச்செடிகளில், தற்போது வெண்ணிற மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன.
பிரம்ம கமலம் மலரை போல இரவில் பூத்து பகலில் வாடும் இந்த கள்ளி மலர்களை, ஆன்மிக பக்தர்களும், பொதுமக்களும் பிரமிப்போடு பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த கள்ளி மலர்களை பறித்துச் சென்று கிராம தெய்வங்களுக்கு பூஜை செய்து வருகின்றனர்.






