என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் முற்றுகை போராட்டம்"
- மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
- முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பஸ் வசதி கேட்டு அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பஸ் வசதிகேட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தோம். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னோம்.
இதனைதொடர்ந்து அரசு போக்குவரத்துகழக அலு வலர்கள், வருவாய்த்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் பஸ்வசதி விடுவத ற்கான சாத்தியகூறுகள் குறித்து அறிவுரை வழங்கி னார். இந்த வழித்தடத்தில் தார்சாலை இல்லை என்றும், தார்ச்சாலை வசதி இருந்தால் மட்டுமே அரசு பஸ் இயக்க முடியும் என போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதனைதொடர்ந்து ரூ.20.60 லட்சம் மதிப்பில் ஓரடடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
பள்ளி திறந்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை பஸ் இயக்கப்படவில்லை. எனவே அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளிக்கு வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் பல மாணவர்கள் இடையிலேயே கல்வியை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மண்டலமேலாளர் டேனியல் சாலமன் தெரிவிக்கையில், மேற்கு மீனாட்சி நாயக்க ன்பட்டியில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடம், எம்.வி.எம்.அரசு மகளிர் கல்லூரி பின்புறம் மாற்ற ப்பட்டது. பஸ் வசதி கேட்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் மணற்பா ங்கான ரோடுகளும், குண்டும், குழியுமான சாலைகளும் உள்ளதால் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் பஸ்வசதி செய்து தரப்படும். இதுகுறித்த அறிக்கையை கல்வித்துறை, பள்ளிநிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முழுமையான சாலை வசதி அமைக்கப்பட்டவுடன் பஸ் வசதி இயக்கப்படும் என்றார்.






