என் மலர்
நீங்கள் தேடியது "புடவைகள் திருட்டு"
- தங்கராஜ் (42) இவர் கொண்டலாம்பட்டியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- சம்பவத்தன்று தங்கராஜன் கவனத்தை திசை திருப்பி விட்டு கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 16 பட்டுப் புடவைகளை திருடிக் சென்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள சங்ககிரி அடுத்த பூவனூர் கன்னாங்கேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (42) இவர் கொண்டலாம்பட்டியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் தங்கராஜன் கவனத்தை திசை திருப்பி விட்டு கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 16 பட்டுப் புடவைகளை திருடிக் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு புடவைகளை சரி பார்த்தபோது மேற்கண்ட புடவைகள் காணாமல் போனது தங்கராஜிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.






