என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5-வது மாடி"

    • அலியா நாயக் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் வேலை செய்துவந்தார்.
    • சக தொழிலாளிகள், அலியாநாயக்கை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.

    புதுச்சேரி:

    ஒரிசா மாநிலத்தைச்சேர்ந்தவர் அலியா நாயக் (வயது25). இவர், காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை அருகே நடைபெற்று வரும் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் வேலை செய்துவந்தார். இரவு வேலைகள் முடிந்த நிலையில், கட்டுமான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அலியாநாயக் தவறி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த சக தொழிலாளிகள், அலியாநாயக்கை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலியாநாயக் பலியானார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×