என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கண்காட்சி"

    • ரூ.140 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 14 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
    • டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 26-ந் தேதி வருகிறார். திருச்சியில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர் 27-ந் தேதி காலை திருச்சியில் நடை பெறவுள்ள விவசாயிகள் சங்கமம் என்கிற கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றவுள்ளார்.

    தொடர்ந்து, பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். மாலை 5 மணியளவில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையம், மாநாட்டு அரங்கம் உள்பட ரூ.140 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 14 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

    வல்லம குவாரி சாலைக்கு தமிழ் சாலை என பெயர் சூட்டவுள்ளார். கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேற்று காலை வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.

    ×