என் மலர்
நீங்கள் தேடியது "செல்பி எடுத்து கொண்ட"
- நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்தார்.
- மக்களை பார்த்து நடிகை சமந்தா சிரித்தவாறு கையசைத்து சென்றார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்து ள்ள அடர்ந்த வனபகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஈரோடு, கோவை, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் வழிபடுவது வழக்கம்.
இதேபோல் கர்நாடக மாநில மக்களும் பண்ணாரி அம்மனை வழி வழிபட்டு செல்கின்றனர். இதுபோக சினிமா பிரபலங்கள், முக்கியமான வி.ஐ.பி.க்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் இருந்தனர்.
நடிகை சமந்தா சமீபத்தில் சரும நோயால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனையடுத்து பாதிப்பி லிருந்து குணமடைந்தார்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அதன்படி சமந்தா பண்ணாரி அம்மன் கோவி லுக்கு வந்தார். பின்னர் நடிகை சமந்தா பண்ணாரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி தரிசனம் செய்தார்.
நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் அவரை காண பொதுமக்கள் கூடினார்.
மக்களை பார்த்து நடிகை சமந்தா சிரித்தவாறு கையசைத்து சென்றார். சிலர் நடிகை சமந்தாவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.






