என் மலர்
நீங்கள் தேடியது "நடைபயணமாக"
- வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மொபட்டில் வைத்திருந்த நிலம் கிரைய ஆவண பத்திரங்கள் காணவில்லை என புகார் மனு அளித்தார்.
இந்த புகார் அளித்தும் கடந்த 6 மாதங்கள் ஆகியும், காணாமல் போன பத்திரத்தை கண்டு பிடித்து வழங்காததால் மனமுடைந்த காந்தியவாதி ரமேஷ், நேற்று கிரைய ஆவன பத்திரத்தை கண்டுபிடித்து தராத, வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தை கண்டித்து, நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டார்.
அவர் சிறிது தூரம் சென்ற நிலையில், மொபட்டில் சென்று வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, ரமேஷ் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.






