என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணினி இயக்குபவர்"

    • கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.
    • திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இயங்கிவரும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.

    இந்த பணியிடத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மாதிரி விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களை திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் https://tiruvarur.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவு அஞ்சலில் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர்-610 004 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×