என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "98-வது குரு பூஜை விழா"

    • ராமானந்த சுவாமிகளின் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி ஜீவா தெருவில் இராமானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. 98-ம்ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

    சித்தர் வழிபாட்டு தலமான இங்கு பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, மற்றும் திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சித்தர் ஜீவ சமாதி என்பதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் வருவார்கள்.ராமானந்த சுவாமிகளின் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

    குருபூஜையை முன்னிட்டு ராமானந்தருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிசேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ராமானந்தசுவாமிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×