என் மலர்
நீங்கள் தேடியது "டிரைவரிடம் 500"
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தினார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாஞ்சன். டிரைவர். சம்பவத்தன்று இவர் சென்னிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பணிக்கம் பாளையம் பிரிவு என்ற பகுதியில் சென்ற போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் திடீரென அந்த நபர் 500 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகாஞ்சன் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த வடிவேல் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






