என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச குத்துச்சண்டை போட்டி"
- சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இந்தியாவின் ராதாமணி லாங்ஜம் (57 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
பாங்காக்:
உலக குத்துச்சண்டையில் இளையோருக்கான பியூச்சர்ஸ் கோப்பை போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனையான மராட்டியத்தை சேர்ந்த சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் மர்டோனோவா நஜோகட்டுடன் மோதினார்.
சரமாரியாக குத்துகளை விட்டு எதிராளியை திணறடித்த சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அதே சமயம் குஞ்சன் (48 கிலோ), ஜாய்ஸ்ரீதேவி (54 கிலோ), அம்பேத்கர் மீட்டே (50 கிலோ). ஆகிய இந்தியர்கள் தங்களது இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர்.
முன்னதாக அரைஇறுதியில் தோல்வியை தழுவிய இந்தியாவின் ராதாமணி லாங்ஜம் (57 கிலோ) வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கம் வென்றுள்ளது.
- மகாராஷ்டிர மாநிலம் பஞ்ச்கனியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பியுள்ளாா்.
- திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், பிரசாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
திருப்பூர்:
பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சிரபுஞ்சி நகரில் வசித்து வரும் துரைசாமி, நா்மதா தம்பதியின் மகன் பிரசாந்த். இவா் சின்னக்கரையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளாா்.
உஸ்பெகிஸ்தானில் வரும் செப்டம்பா் 13 முதல் 17 வரை 5 நாட்கள் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் பஞ்ச்கனியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பியுள்ளாா்.
இளம் குத்துச்சண்டை வீரா் பிரசாந்தை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத், பிரசாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அதே போல கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம் பிரசாந்துக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சா்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான விமான கட்டணம் உள்ளிட்ட பயண செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து இளம் குத்துச்சண்டை வீரா் பிரசாந்த் கூறுகையில், சா்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவது மிகவும் பெருமையாக உள்ளது. போட்டிகளில் வெற்றி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.






