என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்பு வார்த்தை"

    • குடிநீர் ஊரணியை தூய்மைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • உறுப்பினர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணி குடிநீர் ஊரணியானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    காவிரி கூட்டு குடிநீர் வராத சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க இதிலிருந்து தண்ணீர் எடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்சமயம் இந்த ஊரணி முழுவதும் பாசம் படிந்துள்ள காரணத்தினால் அதனை போக்கும் விதமாக கட்லா, ரோகு, சிசி, கெண்டை முதலிய ரகங்களை சேர்ந்த சுமார் ரூ.16 ஆயிரம் மதிப்பீட்டிலான 4000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

    ஊரணியில் ஏற்பட்டுள்ள பாசங்கள் முற்றிலுமாக அகற்றும் நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இந்த பணியில் பேரூராட்சி மன்ற சேர்மன் அ.புசலான், செயல் அலுவலர் வே.கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன்,வார்டு உறுப்பினர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    ×