என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் துப்பாக்கி திருட்டு"

    • சென்னைக்கு சென்று பார்த்தபோது காரில் இருந்த பணம், துப்பாக்கி உள்ளிட்டவை மாயமாகி இருந்தது.
    • திருடு போன துப்பாக்கி உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் அரசுவிளையை சேர்ந்தவர் பிளாட்பின் (வயது44). பல் டாக்டரான இவர் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் வேலை நிமித்தமாக காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரில் ரூ.2.40 லட்சம் ரொக்கம், 10 குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, செல்போன் ஆகியவை இருந்தது.

    மதியம் மதுரை சிந்தாமணி டோல்கேட் அருகே வந்தபோது, அசதி காரணமாக சாலையோரத்தில் பிளாட்பின் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் நண்பர்கள் உள்பட 4 பேரும் சில மணிநேரம் தூங்கிவிட்டு பின்னர் சென்னைக்கு சென்றனர்.

    சென்னைக்கு சென்று பார்த்தபோது காரில் இருந்த பணம், துப்பாக்கி உள்ளிட்டவை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிளாட்பின், மதுரை சிந்தாமணி டோல்கேட் பகுதியில் தூங்கியிருந்தபோது மர்ம நபர்கள் காரில் இருந்த பணம், துப்பாக்கிகளை திருடியிருக்கலாம் என சந்தேகித்தார்.

    இது தொடர்பாக உடனடியாக மதுரை வந்த பிளாட்பின் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதில், சிந்தாமணி ரிங்ரோட்டில் காரை நிறுத்தி தூங்கியிருந்தபோது, மர்ம நபர்கள் காரில் இருந்த பணம், குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி, செல்போன், 16 ஏ.டி.எம். கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை திருடிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன துப்பாக்கி உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

    ×