என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாயை கடித்து கொன்றது"

    • நாயை தலைப்பகுதியில் சிறுத்தை கடித்து குதறி கொன்றது.
    • சத்தமிட்டதால் காட்டுக்குள் சிறுத்தை ஓடி மறைந்தது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டிய நைனப்பன் கரடு என்ற இடத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    வீடுகளின் பின்புறமாக சுமார் 10 அடி தூரத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் வருவதை தடுப்பதற்காக அகழி (வேலி) அமைக்கப்பட்டுள்ளது.

    நைனப்பன் கரடு பகுதியில் சுப்புரான் (64) என்பவர் செம்மறி ஆடு, வெள்ளாடு என 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார், ஆடுகளுக்கு பாதுகாப்பாக 2 நாய்களை சுப்புரான் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்ற சுப்புரான் மாலை வீடு திரும்பி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.

    ஆடுகளுக்கு பாதுகாப்புக்காக அவரது வளர்ப்பு நாய் அருகே உள்ள வேப்ப மரத்தில் சங்கிலி யால் கட்டப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஆடு களுக்கு பாதுகாப்பாக கட்டி வைத்திருந்த நாயின் சத்தம் கேட்டது. இதையடுத்து சுப்புரான் வெளியில் வந்து பார்த்தார்.

    அப்போது சுப்புரான் வளர்த்து வந்த நாயின் கழுத்து மற்றும் தலைப்பகுதி யில் ஏதோ ஒரு விலங்கு கடித்து குதறிய நிலையில் ரத்த காயங்களுடன் நாய் துடி துடித்து அங்கேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நாய் சங்கிலியால் கட்டி இருந்ததால் சிறுத்தை நாயை கடித்து கொன்றதாக தெரிகிறது.

    இது சுப்புரான் கூறியதாவது:

    இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வந்த போது தான் வளர்த்து வந்த 2 நாய்களில் ஒரு நாயை தலைப்பகுதியில் சிறுத்தை கடித்து குதறி கொன்றது. இதை கண்டு நாங்கள் சத்தமிட்டதால் காட்டுக்குள் சிறுத்தை ஓடி மறைந்தது.

    கடந்த 10-நாட்களுக்கு முன்பு என்னுடைய மற்றொரு நாயை சிறுத்தை கடித்து தாக்கி இழுத்து சென்ற போது அகழியை தாண்ட முடியாமல் சிறுத்தை நாயை பாதியில் விட்டு விட்டு சென்றது, அந்த நாயை காப்பாற்றி விட்டோம்.

    ஆனால், கடந்த ஒரு வார த்திற்கு முன்பு மற்றொருவர் வளர்த்து வந்த நாயை இரவு நேரத்தில் சிறுத்தை கடித்து கொன்று காட்டுக்குள் இழுத்து சென்று விட்டது.

    இது போன்ற சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இது குறித்து வனத்துறை யினரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நுழைந்து தொடர்ந்து நாய்களை வேட்டையாடி வரும் சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×