என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோ் கலசம் வைக்கும் நிகழ்ச்சி"

    • தேரில் கலசம் வைக்கப்பட்டு திருவிழாவின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • கோவில் செயல் அலுவலா் ராமநாதன் மற்றும் கோவில் குலத்தவா்கள் செய்து வருகின்றனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவிலில் தோ் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இக்கோவிலின் 140வது ஆண்டு மாசி மஹா சிவராத்திரி, 3 நாள் தோ்த் திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக முகூா்த்தக் கால் போடப்பட்டு முறைப்படி திருவிழா பணிகள் 1-ந் தேதி தொடங்கப்பட்டன. தற்போது கொடியேற்றத்துடன் தேரில் கலசம் வைக்கப்பட்டு திருவிழாவின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கும் திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலா் ராமநாதன் மற்றும் கோவில் குலத்தவா்கள் செய்து வருகின்றனா்.

    ×