என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்"
- பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
- பணப்பல ன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறு த்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி அரசு ஆஸ்பத்திரி யில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்குள்ள காவலர்கள் மற்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் மாதம் 4 நாள் விடுமுறை வழங்க வேண்டும். தனியார் நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும். துப்புரவு தொழி லாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்தி ருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் தங்கள் கோரிக்கை அட்டையுடன் கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட தால் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.






