என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்புகள் பிடிக்கப்பட்டது"

    • 15 அடி நீளமுள்ள 2 பாம்புகள் பிடிக்கப்பட்டது
    • வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவிந்தா புரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்ப வர்தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    நேற்று தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தபோது தொழிற்சாலை பின்புறம் சத்தம் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது 15 அடி நீளமுள்ள 2 மலைப் பாம்புகள் மற்றும் ஒரு பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி ஜாப்ரபாத் பகு தியில் உள்ள பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தொழிற்சாலையில் இருந்த 3 பாம்புகளை பிடித்து வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    ×