என் மலர்
நீங்கள் தேடியது "ஆக்கிரமித்த இடங்கள்"
- ராஜபாளையத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்த இடங்கள் மீட்கப்பட்டது.
- ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் சர்வே எண் 176 உட்பிரிவின் கீழ் இடங்கள் வீட்டுமனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் வாங்கியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அதில் 8 பேருக்கு சொந்தமான 60 சென்ட் இடங்களை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வளர்த்து வந்தனர்.
இடத்தின் உரிமையாளர்கள் கேட்டு சென்றால் அவர்களை ஆபாசமாக பேசி மிரட்டியும் வந்தனர். இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தர உத்தரவு வாங்கினர். கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமசந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் புல்டோசர்களை கொண்டு அதிரடியாக ஆக்கிமிப்புகளை அகற்றினர்.
அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வட்டாட்சியரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.






