என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை"

    • ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள மேலபாலாமடை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் ஆறுமுக கனி (வயது 33). டிரைவரான இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டின் பெயரிலும், சுய உதவி குழுவிலும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

    ஆனால் அதில் தொடர்ந்து பணத்தை இழந்த நிலையில் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆறுமுககனி திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுக கனி நள்ளிரவு இறந்தார்.

    இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனானதால் விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கினார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது.

    அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் நாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது.

    அதிலும் சிவன்ராஜ் தான் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று மனமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலந்து குடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×