என் மலர்
நீங்கள் தேடியது "பரிவட்டம்"
- கிருங்காகோட்டை ஜல்லிக்கட்டில் புதிய நாச்சி காளைக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
- கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் கிருங்காகோட்டையில் ஜெயமனி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை தமிழக அளவில் 7 வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி, ஜல்லிக்கட்டு பந்தயங்களில் புகழ் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 22-ந் தேதி அன்று திடீரென நாச்சி காளை மரணமடைந்தது. இந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ஜெயமனிக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தாங்கள் சாமியாக கும்பிடும் ஜல்லிக்கட்டு காளை இறந்தால் அதை ஈடுகட்டும் விதமாக கிராம வழக்கப்படி பாரம்பரிய முறைப்பட்டி புதிய காளைக்கு பரிவட்டம் கட்டப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருங்காக்கோட்டையில் உள்ள குலதெய்வமான பெரிய நாச்சி கோவிலில் வைத்து தட்டில் திருநீற்றில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, புதிய நாச்சி காளைக்கு பரி வட்டம் கட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு நின்ற பெண் பக்தருக்கு அருள் வந்தது. காளைக்கு முன் நின்று திருநீரை கையில் எடுத்து புதிய காளையை நாச்சி என்று அழைத்தார். அதை கேட்டவுடனே ஆக்ரோச மாக துள்ளிய புதிய காளை நாச்சி சூடம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டை முன்பக்க காலை வைத்து தட்டி விட்டு சென்றது.
அருள் வந்த பெண் தங்கள் நாச்சி காளை தட்டை தட்டி விட்டு சத்தியம் செய்ததாக எடுத்துக்கொண்டு வந்து ட்டாட நாச்சி... வத்துட்டாட நாச்சி... என கூறிய இந்த காட்சி இடம் பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






