என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய தரநிலைகள் குறித்து பயிற்சி"
- அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைைமையில் நடைபெற்றது
- இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நன்குணர்ந்து நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
தேனி:
இந்திய தர நிலைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
இந்த பயிற்சி வகுப்பில், தரமான பொருட்களை தயாரிப்பதில் இந்திய தர நிர்ணய பணியகத்தின் பங்கு மற்றும் பொறுப்பு, இந்திய தர நிர்ணய நிறுவனம் மார்க் ரூ ஹால்மார்க் (தங்க நகைகள்), மாநில அரசு துறைகளின் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளியில் இந்திய தரநிலைகளின் முக்கியத்துவம், இந்திய தர நிர்ணயத்தால் குறியிடப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவம்,
தரமான பொருட்களின் தரம் குறித்து எளிதில் அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்திய தர நிர்ணய பணியகம் செயலியின் சிறப்பம்சங்கள், தயாரிப்புகளை தவறாகப் பயன்படுத்தினால் பி.ஐ.எஸ் சட்டத்தின் தண்டனை மற்றும் விதிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் உலக அளவில் சந்தை விரிவாக்கத்தில் இந்திய தர நிர்ணய பணியகம் மற்றும் இந்திய தர நிர்ணய நிறுவனம் ஆகிய தரநிலைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்திய தர நிர்ணய பணியகத்தின் செயலி நுகர்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை நன்குணர்ந்து நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.






