என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை- பணம் திருட்டு"

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சாமநகரை சேர்ந்தவர் வேலு (வயது 47), டிராவல்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சபரிமலை சென்றுள்ளார். அவரது மனைவி பூங்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் திருப் பத்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மாமியார் வீட் டிற்கு சென்று இரவு அங் கேயே தங்கியுள்ளார்.

    பின்னர், நேற்று காலை வீட் டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மூன்று பீரோக்கள் உடைக்கப் பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட் களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பூங்கொடி திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் இதுகுறித்து வழக் குப்பதிந்து திருட்டு சம்பவத் தில்ஈடுபட்டமர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ×