என் மலர்
நீங்கள் தேடியது "நாட்டு நல பணித்திட்டம்"
- நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடந்தது.
- இதன் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சந்திரன், உதவி திட்ட அலுவலர் சாம்சன் வில்லியம் ஆகியோர் செய்திருந்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியில் மதுரை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடந்தது. இந்த முகாமினை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி, தலைமையாசிரியர் சேவியர் ராஜ், மாவட்ட தொடர்பு அலுவலர்கள் ராஜ்குமார், நவநீதகிருஷ்ணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பல் மருத்துவ முகாம், உலக தமிழ் சங்க நூல் அரங்கம், படைப்பாற்றல் அரங்கம், டெங்கு விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவர்களின் வாசிப்பு எழுத்தாற்றலை உலக தமிழ் சங்க இயக்குனர் அன்புச்செழியன் பாராட்டினார்.
இந்த முகாம் நிறைவு விழாவிற்கு தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் தலைமை தாங்கினார். மக்கள் சக்தி இயக்க தலைவர் அசோகன், பெத்சான் சிறப்பு பள்ளி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் வரவேற்றார்.
மாணவர்களின் சமூக பணியை பாராட்டி நூல்கள் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதன் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சந்திரன், உதவி திட்ட அலுவலர் சாம்சன் வில்லியம் ஆகியோர் செய்திருந்தனர்.






