என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் ஒர்க்‌ஷாப் பூட்டை உடைத்து"

    • சஞ்சீவி மூர்த்தி வழக்கம் போல் ஒர்க்‌ஷாப்பை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் காணாமல் போயிருந்ததை கண்டு சஞ்சீவி மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் மாட்டு கருப்புச்சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவி மூர்த்தி (27). இவர் செம்புளிச்சாம்பாளையம் பிரிவில் கார் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து சஞ்சீவி மூர்த்தி வீடு திரும்பினார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் ஒர்க்‌ஷாப்பை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் காணாமல் போயிருந்ததை கண்டு சஞ்சீவி மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசில் சஞ்சீவி மூர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவத்தில் ஒர்க்‌ஷாப்புக்கு திருட வந்த மர்ம நபர் சி.சி.டி.வி. காட்சிகளை மட்டும் எடுத்து செல்ல காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

    அப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்து ள்ளதா? அதை மறைக்க இந்த கேமிரா காட்சிகளை எடுக்க அந்த மர்ம நபர் வந்தாரா? என்றும் பல கோணங்களில் பவானி டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது வருகிறது.

    ×