என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்"

    • கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது
    • 16 ஆண்டுகளில் 570 பேர் பயிற்சி முடித்து அணுசக்தி துறைகளில் பணிசெய்து வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இத்துறைகளில் அணுசக்தி தொழில்நுட்ப பணிகளுக்கான உயர்கல்வி பயிற்சி 2006-ம் ஆண்டில் இருந்து கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பாபா அணு உலை ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது.

    இதில் பொறியியல், இயந்திரவியல், ரசாயன பொறியியல், விண்கலன் தொழில்நுட்பம், எரிபொருள் சுழற்சி, பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப் பிரிவுகளில் 16 ஆண்டுகளில் இதுவரை 570 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் அணுசக்தி துறைகளில் பணி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், 16-ம் ஆண்டில் பயிற்சி முடித்த 20 பேருக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது

    இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அங்கேயே பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×