என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய்கொடுமையால் 2 பேர் தற்கொலை"

    • நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). கடந்த சில நாட்களாக முடக்குவாத நோயினால் பாதிக்கப்படு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாமல் தொடர்ந்து கால்வலி இருந்ததால் மனமுடைந்த அவர் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் மவுணன் (67). இவர் தோட்ட வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் விஷம் குடித்து மயங்கினார்.

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×