என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாவா நிரலாக்கம்"

    • தகவல் தொழில்நுட்பவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
    • ‘ஜாவா நிரலாக்கம்’’ என்பது உலகின் முதன்மையான மொழி ஆகும்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் ''மேம்படுத்தப்பட்ட ஜாவா நிரலாக்கத்தை நெட்பீன்ஸ் எனும் மென்பொருள் மூலம் பயன்படுத்துவது'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தின ராக சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை கங்காதேவி கலந்து கொண்டார். 3-ம் ஆண்டு மாணவி துர்கா தேவி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    துறைத்தலைவர் பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினரான உதவிப்பேராசிரியை கங்காதேவி பேசுகையில், ''ஜாவா நிரலாக்கம்'' என்பது உலகின் முதன்மையான மொழி ஆகும். இதில் உள்ள தரவு வகைகள், ஆப்ரேட்டர்கள் பற்றி எடுத்துரைத்தார்.

    நெட்பீன்ஸ் எனும் மென்பொருள் ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழல் என்றும் இதன் மூலம் ஜாவா மொழி திட்டங்களை எவ்வாறு இயக்குவது? என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார்.

    இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் துறையை சேர்ந்த 96 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு, துணை முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார். 2-ம் ஆண்டு மாணவி தீபா நன்றி கூறினார்.

    ×