என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்"

    • கைக்குழந்தையுடன் இளம்பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமாகினார்.
    • மாயமான இளம்பெண்ணைகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூரை சேர்ந்தவர் மாரிமுத்து(27). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்சிைன ஏற்பட்டது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தனது ஒரு வயது மகன் பாண்டீஸ்வரனுடன் பாரதி வீட்டைவிட்டு வெளியேறினார்.

    இரவு ெவகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சிஅடைந்த மாரிமுத்து உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் சுபாசினி(24). இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள கல்லூரியில் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×