என் மலர்
நீங்கள் தேடியது "ப்ளு வைரஸ் காய்ச்சல்"
- சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
- குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் பருவமழை சீசனில் ஏற்படக் கூடிய காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுவது வழக்கம். கை, கால் வலி, உடம்பு வலி, காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுவது, இருமல் போன்ற பாதிப்புகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சுவாசப் பாதை தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவருக்கு வரக்கூடிய காய்ச்சல் மற்றவர்களுக்கும் எளிதாக தொற்றி விடுவதால் குடும்பமாக பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள சிறு சிறு கிளினிக்குகளில் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இது குறித்து அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி பொதுநல மருத்துவத்து றையின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கூறியதாவது:-
தற்போது வருகின்ற காய்ச்சல் இந்த பருவ காலத்தில் வரக்கூடியது. நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழையாலும், குளிராலும் இந்த பாதிப்பு அதிகரிக்கும். வழக்கமான காய்ச்சல் பாதிப்பை விட 10 முதல் 15 சதவீதம் வரை பாதிப்பு அதிகரிக்கும்.
புளு வைரஸ், அடினோ வைரஸ் போன்றவை இக்காலத்தில் அதிகமாக பாதிக்கும். இத்தகைய காய்ச்சல் பாதிப்பு 95 சதவீதம் தானாகவே சரியாகி விடும்.
சூடான தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும். இணை நோய் உள்ள பெரியவர்களுக்கு காய்ச்சலால் மற்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பருவ கால காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவான அளவில் வருவதாக டீன் சாந்தராமன் தெரிவித்தார்.
'புளு' காய்ச்சல் பாதிப்பு தான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. அதே நேரத்தில் டெங்கு பாதிப்பும் சென்னையில் அதிகரித்து உள்ளது.
- .பொதுவாக ப்ளு வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும்.
- ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.
சென்னை:
வைரஸ் காய்ச்சல்களில் ப்ளு வகை வைரஸ் காய்ச்சல் பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகளவு பரவுவது உண்டு.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாலும், முகக் கவசம் அணிந்ததாலும் இத்தகைய வைரஸ்கள் தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் தலையெடுக்கத் தொடங்கி உள்ளன.
அந்த வகையில் தற்போது சென்னையில் ப்ளு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்படும் சிறுவர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இருமல், காய்ச்சல் பிரச்சினைகளுடன் அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
பொதுவாக ப்ளு வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ப்ளு வைரஸ் காய்ச்சலின் அறிகுறியாகும். இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது. என்றாலும், ப்ளு வைரஸ் பாதிக்கும் பட்சத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால் அது சுவாச மண்டலத்தைதான் அதிகமாக தாக்கும். இதனால் இருமல் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி ஏற்படுதல், வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.
ப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளுடன் தான் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சில மருத்துவமனைகளில் சிறுவர்கள் பிரிவு நிரம்பி வழிந்துள்ளது.
ப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். ப்ளு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்றவர்களை பாதிக்கும்.
ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு சென்றால் ப்ளு வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.






