என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு மாயமான இளம்பெண்"

    • தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
    • கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் பெண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 40).

    இவரது மகள் பவித்ரா. பவித்ராவுக்கு, தமிழரசன் என்பவருக்கும் திருமணமாகி கவிதமிழ் என்ற 3 மாத குழந்தை உள்ளது.

    இந்நிலையில் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஷோபனா புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ராவையும், கடத்தியதாக கூறப்படும் சூர்யாவையும் தேடி வருகின்றனர். 

    ×