என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி"

    • மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளிலும் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி, கம்பைநல்லூர், காரிமங்கலம், அதகபாடி, தொப்பூர், பி.அக்ரஹாரம், பென்னாகரம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளங்கி விலை ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. தருமபுரி உழவர் சந்தை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.

    இந்த நிலையில் தருமபுரி உழவர் சந்தைக்கு தொடர்ந்து முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் விலையும் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதன் காரணமாக முள்ளங்கி விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளிலும் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து வாடகைக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் முள்ளங்கியை உழவர் சந்தைகளுக்கு கொண்டுவர வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

    • முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
    • முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரட், பீன்ஸ், தக்காளி, முட்டைகோல், கத்தரிக்காய், முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

    கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் தின்னக்கழனி, பூதிபட்டி பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். இதற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால், நிலத்திலேய அழுகிய முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.

    இதுகுறித்து, பூதிபட்டியை சேர்ந்த விவசாயி மணி, 48 கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பில் முள்ளங்கி பயிரிட்டேன். இதற்காக, 35 ஆயிரம் ரூபாய் செலவிட்டேன்;

    35 நாட்களில் அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையில் முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டேன். முள்ளங்கி விளைச்சல் இருந்தும் அதற்கு போதிய விலை இல்லாததால், சில நாட்கள் பொறுத்து அறுவடை செய்யலாம் என நினைத்தபோது தொடர் மழை பெய்ததாலும், முள்ளங்கி விலை கிலோ, 5 ரூபாய்க்கு கீழ் குறைந்ததாலும் விற்கமுடியவில்லை. இந்நிலையில் நிலங்களிலேயே அழுகிய முள்ளங்கிகளை டிராக்டர் மூலம் அகற்றி நிலத்தை உழுது வருகிறோம் என கவலையுடன் கூறினார்.

    ×