என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு ஒத்திகை"

    • மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அலுவலர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    திடீரென தீ பிடித்தால் பதட்டம் இன்றி எப்படி அணைப்பது, மேலும் பரவாமல் தடுப்பது, தீ காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை முறைகள் என்ன? தகவல்களை எப்படி பரிமாற வேண்டும், என்பவை குறித்த பயிற்சியை மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலர்கள் ரமேஷ்பாபு, வெங்கட கிருஷ்ணன் ஆகியோர் ஒத்திகையாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தனர்.

    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை சிவதாபுரத்தில் நடைபெற்றது.
    • ஒத்திகை நிகழ்ச்சியை சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி நேரில் பார்வையிட்டார்.

    சேலம்:

    பேரிடர் தனிக்குழு துறை சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை சேலம் சிவதாபுரத்தில் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இதில் மழை வெள்ளம், மழைக்காலங்களில் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதனைக் குறித்து சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ துறையினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஒத்திகை மூலம் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியை சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வேலு, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×