என் மலர்
நீங்கள் தேடியது "தீமிதிப்பு"
- தொண்டி அருகே உப்பூர் விநாயகர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்தனர்.
- பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெயிலுக்கு உகந்த விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. ராமன் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இந்த விநாயகப்பெருமானின் அருள் பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் கடலில் தீர்த்தமாடி கோவில் முன்பு வளர்க்கப்பட்ட தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளை கையில் ஏந்தியவாறு பக்தர்கள் பலர் தீ மிதித்தது மெய் சிலிர்க்க வைத்தது.
பொதுவாக அம்மன் கோவில், முருகன் கோவில்களில் தீமிதிப்பது வழக்கம். ஆனால் இங்கு விநாயகப்பெருமானை வேண்டி விரதமிருந்து பக்தர்கள் தீமிதிப்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.






