என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் எரிந்து நாசமானது"

    • காரை அயோத்தி யாப்பட்டணத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 23)என்பவர் ஒட்டினார்.
    • கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    சேலம்:

    சேலத்தில் இருந்து நேற்றிரவு 10 மணியளவில் பட்டர் பிளை மேம்பாலம் வழியாக நெய்க்காரப்பட்டி பகுதியில் ஒரு கார் ஈேராடு நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை அயோத்தி யாப்பட்டணத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 23)என்பவர் ஒட்டினார்.

    அந்த காரில் ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த கார் டிரைவர் காரை சேலத்திற்கு திருப்பினார். அங்கிருந்து 100 அடி தூரம் வருவதற்குள் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த டிரைவர் காரை விட்டு இறங்கி ஓடினார். பின்னர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மின் கசிவு காரணமாக கார் தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

    ×